2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பழைய மாணவர் சங்கக் கூட்டம்

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்

திருகோணமலை - மூதூர் வலயக் கல்வி பிரிவின் கட்டைபறிச்சான் வடக்கு கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள சேனையூர் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கூட்டம், வௌ்ளிக்கிழமை (15) பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், அனைத்து பழைய மாணவர்களையும் வந்து கலந்துகொண்டு கல்லூரியின் எதிர்கால அபிவிருத்திக்கான பங்களிப்பை வழங்குமாறு, கல்லூரி அதிபர் செல்வநாயகம் ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்படி பழைய மாணவர்களின் திருகோணமலை நகரக் கிளையையும் புனரமைப்பதற்கான ஏற்பாடுகளும் நகரில் இடம்பெற்று வரும் நிலையில், பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான கூட்டமும் நடைபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X