Thipaan / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச்சென்ற தனியார் பஸ்ஸொன்று, நிக்கவௌ பகுதியிலுள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த ஏழு பெண்கள் உட்பட ஒன்பது பேர், அநுராதபுரம், ஹொரவ்பொத்தானை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (24) 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த ஒன்பது பேர் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் ஏழு பேர், மேலதிக சிகிச்சைகளுக்காக, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு விபத்துக்குள்ளானவர்கள் பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் எனவும் திருகோணமலையிலுள்ள தமது உறவினர்களைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், பஸ்ஸில் 18 பேர் பயணித்ததாகவும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
8 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
20 Mar 2026