Princiya Dixci / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியில் பஸ்ஸில் பயணித்த வயோதிபர், பஸ்ஸிலிருந்து இறங்கும் போது, கால் தவறி விழுந்து பஸ்ஸின் சில்லுக்குள் சிக்கிப் பரிதாபமான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், ஹொரவ்பொத்தான-மொறகேவ 77ஆம் கட்டைப் பகுதியைச்சேர்ந்த மதுராக பிரதிலாகே ஞானசிறி (வயது 76) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரத்திலிருந்து அவரது வீட்டுக்கு வருகை தந்த நிலையில் அந்த பஸ்ஸிலிருந்து முன் கதவால் இறங்கும் போது, கால் தவறி பின் புறமாகவுள்ள சில்லுக்குள் சிக்குண்டதாகவும் அவ்விடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கெப்பித்தித்திகொள்ளாவ மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அஜித் திஸாநாயக்க சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
சடலம், அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்துள்ளதாகவும் ஹொரவ்பொத்தானப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026