Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 05:12 - 1 - {{hitsCtrl.values.hits}}
மூதூரூரிலிருந்து , தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு வீதியூடான நல்லூர், பாட்டாளிபுரம் வரைக்குமான பகுதிகளுக்கு, நேரடி இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் இடம்பெறாதமையால், அப்பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இதனால், இப்பகுதியிலுள்ள பள்ளிக்குடியிருப்பு, சின்னக்குளம், இத்திக்குளம், நல்லூர், பாட்டாளிபுரம், வீரமாநகர் சீனன்வெளி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரதேசங்களிற்கு தினமும் சென்றுவரும் மக்கள் கால் நடையாகவும், துவிச்சக்கரவண்டிகளிலும் செல்வதோடு, கூடுதலான பணத்தினை போக்குவரத்துக்காகவே செலவிடுகின்றனர்.
இப்பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் வேறு இடங்களுக்கு தொழிலுக்குச் செல்வோரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் இப்பிரதேசங்ககளை மையப்படுத்தி ,மூதூர் இ.போ.ச சாலையூடாக நடைபெற்று வந்த, நேரடி பஸ்சேவை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் மக்கள் சுட்டிக்காட்டினர்.
இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றப்போதும் எந்ததொரு தீர்வும் கிடைக்கவில்லை. இதனால், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சு.சுரேஷ் Tuesday, 04 December 2018 09:38 AM
உதவிகளை செய்து கொடுத்தாள் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் மருத்துவமனை செல்வது கூட வாகனம் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான மக்கள் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றன தயவுசெய்து உதவி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
40 minute ago
51 minute ago
2 hours ago