Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2017 ஜூலை 14 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
குச்சவெளி பிரதேச செயலாளர் எல்லையில், உரிமையாளர்களின் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படும் 133 வீடுகளை, வீடுகள் இல்லாதவர்களுக்கு வழங்க, குச்சவெளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யுத்தம் சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்காக, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் முயற்சியால் அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகளில் பல, பல்வேறு காரணங்களுக்காக பராமரிப்பின்றிக் காணப்படுகின்றன.
அதாவது, போக்குவரத்துப் பிரச்சினை, பிள்ளைகளின் கல்வி, இந்தியாவில் அகதிகளாக உள்ளமை, வேறு மாவட்டங்களில் தொழிலுக்காகக் குடியேறியமை மற்றும் நகர வாழ்க்கையின் மோகம் ஆகிய காரணங்களால், சலப்பையாறு 18 நாவற்சோலை 13 பல்லவன்குளம் 47 கள்ளம்பற்றை 55 ஆகிய இடங்களில் உள்ள 133 வீடுகள், மக்கள் குடியிருக்கவோ அல்லது பராமரிக்கவோ இல்லாமல் பாழடைந்து காணப்படுகின்றன.
இவ்வீடுகளில், சட்டவிரோதச் செயற்பாடுகள் மற்றும் வீடுகளின் கதவு ஜன்னல்கள் உடைக்கப்பட்டு திருடப்படுவதுடன், சட்டவிரோதமாக விற்கப்படுவதுமாக உள்ளது. ஆனால், கும்புறுப்பிட்டி பகுதியைப் பொறுத்தவரை 100க்கும் அதிகமான குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் காணப்படுவதுடன், வீடுகள் கோரி விண்ணப்பித்தும் உள்ளனர்.
இவ்வாறு, பராமரிப்பின்றிக் காணப்படும் வீடுகளில், ஓகஸ்ட மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உரிமையாளர்கள் குடியேற வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுக்கு மூன்று அறிவித்தல்கள் வழங்கப்படும். அவ்வாறு குடியேற முடியாதவர்கள், தமது காரணத்தை ஆதாரங்களுடன் சமர்ப்பித்தால் அது தொடர்பாக எம்மால் பரிசீலிக்க முடியும் என, குச்சவெளி பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago