Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்
அரசாங்கம் தேர்தலை இலக்காக கொண்டு, செயற்கையான இயல்புநிலையை ஏற்படுத்த வேண்டாமெனத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், “மக்களின் பிணங்களின் மேல் ஏறி தேர்தல் ஒன்றை நடத்த ஒரு போதும் அனுமதிக்க முடியாது” என்றார்.
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தற்போது கொரோனா பரவுவதை தடுப்பதை விட தேர்தலை நடத்த வேண்டும் என்பதே இந்த அரசாங்கத்தின் குறிக்கோளாக உள்ளது, அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளையும் அமைச்சர்கள் சிலர் வெளியிட்ட கருத்துகளையும் நோக்குமிடத்து, இதன் உண்மை தன்மையை உணர்ந்துகொள்ளலாம்.
“எமது யாப்பின் படி, மார்ச் மாதம் கலைக்கபட்ட நாடாளுமன்றம் ஜூன் முதல் வாரம் புதிய உறுப்பினர்களுடன் கூட்டப்பட வேண்டும். அவ்வாறு ஜூன் மாதம் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமானால், ஏப்ரல் 20ஆம் திகதி தேர்தலுக்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
“தற்பொது ஏப்ரல் 20ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அன்று முதல் ஊரடங்கு உத்தரவு தளர்தப்படுவது தொடர்பாக செய்தி வெளியாகியுள்ளது.
இவைகள் அனைத்தும் அரசாங்கம் தேர்தல் ஒன்றை நடத்த தயாராகி வருவதையும் அதற்காக நாட்டில் செயற்கையான இயல்புநிலை ஒன்றை உருவாக்க முயற்சித்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.
“செயற்கையான இயல்புநிலையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்க கூடாது. நாளாந்தம் மேற்கொள்ளும் பரிசோதனைகளை அதிகரித்து, இந்த தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையான விவரங்களை மக்கள் முன் வெளிபடுத்த வேண்டும்.
“இந்த தோற்று, நாட்டில் இருந்து முற்றாக நீங்கிய பின்னே தேர்தல் பற்றி யோசிக்க வேண்டும். மக்களின் பிணங்களின் மேல் ஏறி தேர்தலை நடத்த ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இந்த நோயை கட்டுபடுத்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என்ற ரீதியில் நாம் அரசாங்கத்துக்குத் தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக உள்ளோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
28 minute ago