Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 ஜூலை 30 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைகள், தங்களுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், அவற்றில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டுமென, இணைந்த வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,
“மாகாணசபைகள் தமக்கான அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டும். இதன்மூலமே மாகாணசபைகள் தமக்கான பல அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன் மக்களுக்கான சிறந்த ஆட்சியினை வழங்க முடியும்.
“மூவினங்களும் உள்ள இந்த கிழக்கு மாகாணத்திலே, மக்கள் ஒற்றுமையாக வாழ முடியுமென்ற தோற்றப்பாட்டை ஆட்சியாளர்கள் ஏற்படுத்த வேண்டும். அத்துடன், ஆட்சியாளர்களால் பாரபட்சமற்ற முறையில் மக்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இங்கு நிலைமை அப்படியல்ல என்பது தெரிகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
26 minute ago