2025 மே 14, புதன்கிழமை

பிரதான சந்தேகநபருக்கு மறியல்

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, நிலாவெளிப் பகுதியில்  கைப்பற்றப்பட்ட  140 கிலோகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த கல்முனைக்குடியைச் சேர்ந்த 52 வயதுடைய பிரதான சந்தேகநபரை இம்மாதம் 24ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி சமிலா ரத்னாயக்க உத்தரவிட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி, நிலாவெளியில்   வைத்து வானில் 140 கிலோகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இச்சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்தையடுத்து புல்மோட்டை பகுதியிலிருந்து காரொன்றுடன் 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் மற்றுமொருவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்ந நால்வரும் வழங்கிய வாக்குமூலத்தையடுத்து, பாரிய தேடுதல் நடவடிக்கையின் பின்னர் பிரதான சந்தேகநபரை, கல்முனைக்குடி வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X