Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்,
தோப்பூர், கல்முனை, கோரளைப் பற்று பிரதேச செயலகங்களை உருவாக்குவதுத் தொடர்பிலான மீண்டுமொரு கலந்துரையாடல், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, தலைமையில், கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில், இன்று (12) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, எம்.எச்.எம். ஹரீஸ், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், எம்.எஸ். தௌபீக் அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் பண்டாரநாயக்க, அம்பாறை அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டு ஆவணங்கள் அமைச்சர் வஜிரா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கல்முனை கோரளைப்பற்று பிரசேச செயலகங்கள் தொடர்பாகவும் முன்னால் இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, ஹரீஸ் போன்றோர்களும் உடனிருந்து பேசியமை குறிப்பிடத்தக்கது
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப், தோப்பூர் பிரதேச செயலக விடய ஆவணங்களை தெளிவுபடுத்தியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
01 May 2025
01 May 2025