2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பிரதேச தொடர்பாடல் அதிகாரி நியமனம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூன் 21 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - ஜமாலியா பகுதியைச் சேர்ந்த சமாதான நீதவான் நாகூர் நூர் முகம்மட், பிரதேச தொடர்பாடல் அதிகாரியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கான மக்கள் பங்கேற்பை உறுதிப்படுத்துவதையும் ஜனாதிபதியின் தொலைநோக்கை, பொதுமக்களிடம் கொண்டுசெல்வதை நோக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் "ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல்" நிகழ்ச்சித் திட்டத்துக்கே, இருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிர​தேச செயலாளர் பிரிவுக்கான பிரதேச தொடர்பாடல் அதிகாரியாகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X