Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 ஜூலை 30 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஈ.பரீத், அப்துல்சலாம் யாசீம்
கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர வயல் பகுதியில் புதையல் தோண்டிய 8 பேரையும், எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதவான் துசித தம்மிக உத்தரவிட்டர்.
சூரியபுர, சமகிபுரப் பகுதியைச் சேர்ந்த 7 பேரும், ஹபரணை பகுதியைச் சேர்ந்த ஒருவருமே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கந்தளாய்க்குப் பொறுப்பான குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போது, குறித்த 8 பேரும், நேற்று கைதுசெய்யப்பட்டதாகவும், மேலும் சிலர் தப்பியோடியுள்ளதாகவும், கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை, கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்றைய தினமே ஆஜர்படுத்திய வேளை, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, புதையல் தோண்டுவதற்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும், தப்பியோடியவர்களைக் கைதுசெய்வதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
46 minute ago