Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 27 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், எப்.முபாரக்
அரசியல் மற்றும் அரசியல் வாதிகள் மீதிருக்கு நம்பிக்கையீனத்தால், வாக்காளர் பட்டியலை, நிரப்பிக் கொடுத்து, தங்களுடைய பெயர்களை பதிவுசெய்து கொள்வதில், மக்கள் ஆர்வமின்றி இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர், சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ், அந்த நம்பிகையீனத்தால், அரசியல் உரிமைகளை இழகக்கூடிய பாரிய அபாயங்கள், பல்வேறான பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளனவென தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலை, பிரதான குடியிருப்பாளரே நிரப்பவேண்டுமென்று வழமையானதொரு சட்டமிருக்கின்றது. அச்சட்டம் நடைமுறையில் இருந்தாலும், பிரதான குடியிருப்பாளரும், வாக்காளர்களும், அசட்டையாக இருந்துவிடுகின்றனர். இது, பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியலை நிரப்புவதில், மக்கள் மத்தியிலிருக்கும் ஆர்வமின்மை தொடர்பில், ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியலை நிரப்புவதில், மக்கள் அசட்டையாக இருந்துவிடுகின்றனர் என்பதனால், கிராம சேவகர்கள், வீடு, வீடாகச் சென்று, படிவங்களை விநியோகிக்கின்றனர். எனினும் அரசியல், அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையின்மையால், அந்தப் படிவத்தை நிரப்பிக்கொடுக்காமல், பலரும் விட்டுவிடுகின்றனர். இது சமூகத்தில், பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, இவ்வாறான நிலைமையை கருத்தில்கொண்டு எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சமூக அமைப்புகள் அதேபோல, புத்திஜீவிகள், சமூகநலன் விரும்பிகள், இது சம்பந்தமான விளக்கங்களை குறிப்பாக, பாமர மக்களுக்கு அளித்து, அவர்களுடைய வாக்குரிமையை பாதுகாப்பதற்காக, வாக்காளர் இடாப்பில் தமது பெயரைப் பதிவு செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டி, வாக்காளர் படிவங்களை, கிராம சேவகர்களிடம் காலக்கிரமத்தில் ஒப்படைப்பதற்கு வழிகாட்ட வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
வாக்குரிமையின் பெறுமதியை மக்கள் விளங்கிக்கொள்ளாமையும் அரசியலில் இருக்கின்ற வெறுப்பும் நம்பிக்கையீனமும், வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர்களை பதியாமல் விட்டுவிடுவதற்கான பிரதான காரணமாக இருக்கின்றதென அறிய முடிகிறது.
அதிகமான வாக்காளர்கள், வாக்காளர் இடாப்பில் தமது பதிவை மேற்கொள்ளாமல், அசிரத்தையாக இருந்துவிட்டு வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்படும் போது, அதிகாரிகளிடமும், கிராமசேவகர்களிடமும் குறைபட்டு கொள்கின்றனர். இவ்வாறான நிலைமைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago