2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய இருவர் கைது

எப். முபாரக்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில், சில்லறைக் கடையொன்றினை உடைத்து பொருட்களைத் திருடிய இருவரை நேற்று (27) காலையில் கைது செய்துள்ளதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.      

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடையவர்களே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.               

குறித்த சந்தேக நபர்கள், நேற்று முன்தினம்(26) பேராறு, இரண்டாம் குலனி பகுதியில் அமைந்துள்ள சில்லரைக் கடையொன்றினை உடைத்து, ஏழாயிரத்து என்னூறு ரூபாய் பெறுமதியான மீள்நிரப்பு அட்டைகள், மூவாயிரம் ரூபாய் பணம் மற்றும் மாசிகள், மாவு வகைகளையும் திருடியுள்ளதாக, கடை உரிமையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், அப்பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் செயற்பட்ட இருவரை கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

இதன்போது, சந்தேகநபர்கள் திருடிய பொருட்கள் அனைத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து, பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X