அப்துல்சலாம் யாசீம் / 2019 நவம்பர் 08 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமார் ரத்நாயக்க உத்தரவிட்டார்.
புல்மோட்டை யான் ஓயா பாலத்துக்கு அருகில் பயணித்து கொண்டிருந்த ஓட்டோவைச் சோதனையிட்ட பொலிஸார், அதில் பயணித்த மூவரிடமிருந்து, 930 போதை மாத்திரைகளை கைப்பற்றினர். குறித்த போதை மாத்திரைகள், திருகோணமலை பிராந்திய உணவு, மருந்து பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வான் ஒன்றில், 450 போதை மாத்திரைகளுடன் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, ஐவரும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
7 minute ago
10 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
11 minute ago