ஏ.எம்.ஏ.பரீத் / 2018 மார்ச் 08 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை தலைமையாகப் பொலிஸ் பிரிவில் அதி விசேட போதை மாத்திரை மற்றும் கேரளா கஞ்சா வைத்திருந்த இருவர், நேற்று (07) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை அன்பு வழி புரம் பகுதியில் 27 வயதுக் குடும்பஸ்தார் ஒருவரிடமிருந்து 10 போதை மாத்திரை மீட்கப்பட்டதாகவும், அதேபோன்று திருகோணமலை அபேபுரப் பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவரிடமிருந்து 04 போதை மாத்திரைகளும், 01 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் தலைமையாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டு, தலைமையாகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 minute ago
17 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
17 minute ago
20 minute ago