ஒலுமுதீன் கியாஸ் / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சாந்தி நகர், பாலை ஊற்றுப் பகுதியில், இரு வகையான போதை மாத்திரைகளை வைத்திருந்த, 24 வயதுடைய இரு இளைஞர்களை திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று (14) மாலை கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து சிவப்பு நிறத்திலான 4 மாத்திரைகளும் வெள்ளை நிறத்திலான 6 மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை முன்னெடுப்பதற்காக, கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. ஜனோஸன் தெரிவித்தார்.
பின்னர், இந்த இருவரையும், திருகோணமலைப் பொலிஸார் இன்று(15) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போது, இவ்விருவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சுபாஷினி உத்தரவு பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .