Editorial / 2017 ஜூன் 30 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், அரைக்கிலோ போதை கலந்த புகையிலையை வைத்திருந்த நபர் ஒருவரைக் கைது செய்ததாக, திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, சுமேதகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரையே, வியாழக்கிழமையன்று (29) கைது செய்ததாக, பொலிஸார் கூறினர்.
குறித்த சந்தேகநபர், போதைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, சோதனை மேற்கொண்ட போதே சந்தேகநபரைக் கைது செய்ததாக, திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, அவரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினர்.
18 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 Mar 2026