Editorial / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், ஏ.எம்.கீத்
திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 153 மில்லிகிராம் ஹெரோய்னுடன் இருவர், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் நேற்று (14) கைதுசெய்யயப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் வைத்து 61 மில்லிக்கிராம் ஹெரோய்னுடன் மூதூர் பெரிய குளத்தைச் 46 வயதான குடும்பஸ்தர் ஒருவர் முதலில் கைதுசெய்யப்பட்டார்.
இவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், திருகோணமலை பெரிய கடை, நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 62 வயதான குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும் இவரிடமிருந்து 92 மில்லிக் கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைக்காக இரு சந்தேக நபர்களும் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, 85 மில்லிக்கிராம் ஹெரோய்னுடனும் 500 மில்லிக்கிராம் கிராம் கேரள கஞ்சாவும் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை அலஸ்தோட்டம் 3ஆம் கட்டை பகுதியில் வைத்து 45 வயதான குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர் கொழும்பு முல்லேரியா பகுதியைச் சேர்ந்தவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago