Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, கந்தமலாவப் பகுதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் திங்கட்கிழமை ()1) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றும் எம்.மதுசங்க (வயது 38), அவரது மனைவியான ஏ.நிலூகா தமயந்தி (வயது 36), மகனான எம்.மதுவன்த (வயது 06) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
கோமரங்கடவெலப் பிரதேசத்தில் நடைபெற்ற மரண வீடு ஒன்றுக்குச் சென்றுவிட்டு, முச்சக்கரவண்டியில் இவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்;தபோது, வழியில் யானையை கண்டுள்ளனர். இந்நிலையில், முச்சக்கரவண்டியைச் செலுத்திவந்த எம்.மதுசங்க வேகமாக முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற வேளையில் முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச்சென்று கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
33 minute ago
35 minute ago
1 hours ago