2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டி மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

Kogilavani   / 2017 ஜனவரி 22 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை பாலையூற்று பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது பெற்றோல் குண்டு தாக்குதல்,  நேற்று மாலை (21) 5.00 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

திருகோணமலை, காமினி திஸாநாயக்க மாவத்தையைச்சேர்ந்த மரக்கலுகே பிரியதர்ஷன என்பவருடைய முச்சக்கர வண்டிக்கே இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X