Niroshini / 2016 ஜூன் 25 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்
திருகோணமலையில் மாத்திரம் அமுலில் உள்ள மோட்டார் சைக்கிளில் பெண்கள் செல்லும் நடைமுறையை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை பிரதேசத்திற்குப்பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.
சினேகபூர்வமான ஊடக சந்திப் பொன்று இன்று சனிக்கிழமை காலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்றவேளை இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
திருகோணமலையில் மாத்திரம் மோட்டார் சைக்கிளின் பின்புறமாக இருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்க வேண்டும் என்ற நடமுறை பின்பற்றப்படுகின்றன. இதனால் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்களப் பெண்கள் சாரியுடன் பயணிக்கும் போது மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இந்நடமுறை மிக அண்மையில் திருகோணமலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால் கலாசார நிகழ்வுக்கு மற்றும் உத்தியோகப்பணி நிமித்தம் செல்லும் பெண்கள் பண்பாட்டு ரீதியாக இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிப்பதில் சிரமப்படுகின்றனர் என பிராந்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தி ஏ.ஜி.ஜே. சந்திரகுமாரவிடம்நேரடியாக முறையிடப்பட்டுள்ளன.
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago