Thipaan / 2016 ஜூன் 06 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை - ஹொரவபொத்தான பிரதான வீதியின், திரியாய் சந்திக்கு அருகில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹதிவுல்வௌ-மயிலகுடாவ பகுதியைச் சேர்ந்த ஜி.எம்.விஐயவிக்ரம (35வயது) மற்றும் எம்.உபதிஸ்ஸ (37 வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த நபர்களிருவரும், வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்ததாகவும் மதுபானம் போதாமையினால் மொறவெவயிலுள்ள மதுபானசாலைக்கு வேகமாகச் சென்றபோதே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான இரண்டு பேரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago