Thipaan / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா, எம்.முபாரக், தீசான் அஹமட்
திருகோணமலை, தங்கநகர் பகுதியில் வேகமாகச்சென்ற மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயங்களுக்குள்ளான நிலையில் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (07) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், கிளிவெட்டி, தங்கநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தம்பிராசா நளினிகாந் (23 வயது) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த திருச்செல்வம் செல்வா (18 வயது) என்பவர் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம், சேருநுவர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026