Thipaan / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா, வடமலை ராஜ்குமார்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவ பீடத்தின் முதலாம் இரண்டாம் ஆண்டு மாணவ குழுக்களுக்கிடையே, நேற்று மாலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் காயமடைந்த ஜந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில், தீப்தி நுவன் (21 வயது) எச்.எம்.டி.சன்னக ஹேமன்த (22 வயது), புருசோத்தம் (21 வயது), கிரிஷாந் (22 வயது) முகம்மட் ஹாரிஸ் கான் (21 வயது) ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
பல்கலைக்கழக விடுதியை 01ஆம் ஆண்டு மாணவர்கள் கழுவிக்கொண்டிருக்கும் போது 02ஆம் ஆண்டு மாணவர்களின் அறைக்குள் தண்ணீர் சென்றமையினால் ஏற்பட்ட வாய்த்தக்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
இம்மோதல் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை நிலாவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago