Princiya Dixci / 2017 மே 13 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
அனுமதிப்பத்திரமின்றி பட்டா லொறியொன்றில் முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்து, திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்னாயக்க, நேற்று (12) உத்தரவிட்டார்.
கோமரங்கடவெல, திரியாய் சந்தியைச் சேர்ந்த கே.எம்.ஜயசிங்ஹ (45 வயது) என்பவரே அபராதம் விதிக்கப்பட்டவர் ஆவார்.
பட்டா லொறியில் முதிரை மரக்குற்றிகளைக் கொண்டு சென்ற இருவரில், கூலிக்காகச் சென்ற ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அவருக்கே அபராதம் விதிக்கப்பட்டதாகவும் லொறியின் சாரதி குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில் தொடர்ந்தும் வழக்குகள் இடம்பெற்று வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள், பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
19 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
3 hours ago