Niroshini / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி,ஏ.எம்.ஏ.பரீத்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 14 பேர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களாக பெய்த அடைமழை காரணமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளபோதிலும், கொழும்பு போன்ற நகரங்களுக்கு சென்று வந்தவர்களே டெங்கு காய்ச்சலின் தாக்கத்துக்கு பெரும்பாலும் ஆளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், ஆனைச்சேனை, மல்லிகைத்தீவு, முன்னம்பொடிவெட்டை, கிளிவெட்டி, இருதயபுரம், பூநகர் மற்றும் பாலநகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இவ்வருடத்தில் மாத்திரம் மூதூர் பிரதேச கிராமங்களில் 147 டெங்கு நோயாளிகள் இணங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
16 minute ago
25 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
25 minute ago
37 minute ago