2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

முன்னாள் கடற்படை வீரருக்கு சிறையும் அபராதமும் விதிப்பு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

திருகோணமலையில் கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதில் சக கடற்படை வீரரொருவரை பொல்லால் தாக்கி காயப்படுத்திய முன்னாள் கடற்படை வீரருக்கு, 06 மாதங்கள் கட்டாய சிறைத்தண்டனையும் 1,500 ரூபாய் தண்டப்பணமும், அத்தொகையைச் செலுத்தாத பட்டத்தில் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனையும் விதித்து திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா, நேற்று வெள்ளிக்கிழமை (4) தீர்ப்பளித்தார். 

கொடகெதர, வலப்பிட்டியவைச் சேர்ந்த என்.எஸ்.டோன் த சில்வா வயது (28) என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.    

குறித்த நபர், கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை கடற்படை முகாமில் கடற்படை வீரராக கடமையாற்றிய போது மற்றொரு கடற்படை வீரரை பொல்லால் தாக்கி படுகாயமடையச் செய்துள்ளார். 

இக்குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குறித்த வழக்கின் குற்றவாளியாக இனங்கண்ட திருகோணமலை நீதிமன்ற நீதிவான், மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .