Niroshini / 2016 ஜனவரி 07 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
சட்டவிரோதமான முறையில் இரண்டு கிலோ மான் இறைச்சியை வைத்திருந்த நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து குச்சவெளி பதில் நீதிமன்ற நீதிபதி ஹயான் மீஹககே புதன்கிழமை (06)தீப்பளித்தார்.
திருகோணமலை, புல்மோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
குறித்த வழக்கின் சம்மந்தப்பட்ட நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி, மேற்படி தீர்ப்பினை அளித்தார்.
இதேவேளை, சட்ட விரோதமான முறையில் பத்து கிலோ பன்றி இறைச்சியை கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்ட்ட திருகோணமலை, புல்மோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் செலுத்துமாறு குச்சவெளி பதில் நீதிமன்ற நீதிபதி ஹயான் மீஹககே புதன்கிழமை (06)தீர்ப்பளித்தார்.
12 minute ago
20 minute ago
29 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
29 minute ago
41 minute ago