2025 மே 19, திங்கட்கிழமை

மீனவரின் வலையில் துப்பாக்கி சிக்கியது

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட், பதுர்தீன் சியானா

திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னைமரவாடிப் பகுதியிலுள்ள கலப்புக் கடலில் மீன் பீடிக்கச்சென்ற மீனவர் ஒருவரின் வலையில் ரி-56 ரக துப்பாக்கியொன்று சிக்கி மீட்கப்பட்டுள்ளதாக புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மீனவர், புல்மோட்டை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிராகாரம், நேற்று வியாழக்கிழமை (01) இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

இதே கலப்புக் கடலில் இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள்  மீனவர்களின் வலையில் சிக்கிய ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X