2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை கைது

Thipaan   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தையை நேற்றிரவு (07) 10.00 மணியளவில் கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா, இடிமன்-புதுநகர் பகுதியைச் சேர்ந்த பாருக் ரமீஸ் (40 வயது) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தாய் வெளிநாட்டில் உள்ளதாகவும் சிறுமி, தந்தையுடன் வசித்து வந்த நிலையில், அவர் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளார் என, கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அன்றைய தினம் முதல், குறித்த தந்தை தலைமறைவாகி இருந்ததாகவும் சிறுமி உறவினர்களின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரியவருகிறது.

தேடப்பட்டு வந்த தந்தையை நேற்றிரவு கைது செய்துள்ளதாகவும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X