2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்டவருக்கு தண்டப்பணம் விதிப்பு

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற நபர் ஒருவருக்கு, 32,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாதச் சிறைதண்டனை விதித்து, மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று முன்தினம் (29) உத்தரவிட்டார்.                                         

மூதூர்,ஷாபி நகரத்தைச்  சேர்ந்த 21 வயதுடைய  நபருக்கு இந்த தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.                    

குறித்த நபர், கங்கைப் பகுதியிலிருந்து மூதூருக்கு , டிப்பர் வாகனமொன்றில் மணல் ஏற்றிச் சென்ற போது, போக்குவரத்து பொலிஸார் தடுத்து சோதனை மேற்கொண்டப் போதே ,அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றது தெரிய வந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரை கைது செய்து, மூதூர்  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப் போது நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X