2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மணல் ஏற்றிச் சென்ற லொறி சாரதிகள் மூவர் கைது

ஏ.எம்.ஏ.பரீத்   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ்  பிரிவில் நிபந்தனையை மீறி இடம்மாற்றி  மணல் ஏற்றி கொழும்புக்குச் செல்லவிருந்த 03  டிப்பர் வாகன சாரதிகளை நேற்று (21) இரவு  திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸ் பிரிவில் இவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தை மாற்றி மொடக்கன் பிட்டி பகுதியில் மணல் ஏற்றி கொழும்புக்குச் செல்லவிருந்த நிலையில், இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்  28, 27, 48, வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிகள் மூவரையும், கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனத்தையும் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .