2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மணல் ஏற்றிச் சென்றவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ஹொரவ்பொத்தானை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற நபர் ஒருவரை வவுனியா விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்து, மொறவெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

இந்தச் சம்பவத்தில் 23 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும், மணல் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாட்டினை மொறவெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X