2025 மே 19, திங்கட்கிழமை

மதில் விழுந்ததில் சிறுவன் படுகாயம்

Thipaan   / 2016 ஜூலை 24 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

கிண்ணியா, அரை ஏக்கர் பகுதியில் மதில் விழுந்து கால் உடைந்த நிலையில் மயங்கிக் கிடந்த சிறுவன், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (24) காலை 11.30  மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த எம்.ஆர்.சஹ்ரி (08வயது) என்ற சிறுவனே இவ்வாறு  படுகாயமடைந்துள்ளான்.

வீட்டுக்கு முன்னாலுள்ள சிறுவர்களுடன் மதிலில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த போது, கீழே நின்ற இவர் மீது மதில் உடைந்து விழுந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சிறுவனின் கால் உடைந்துள்ளதாகவும் சத்திரசிகிச்சை செய்யவுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X