Editorial / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, புஹாரியடி நாற் சந்தியில் போதை தரும் மதனமோகன லேகிய விற்பனையின் ஈடுபட்ட 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், இன்று காலை 10 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் தெரிவித்தனர்.
குறித்த நபரிடமிருந்து 250 கிராம் கொண்ட 25 லேகியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரையும், லேகியங்களையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஸன் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதி விசாரணைகளை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .