Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 மார்ச் 27 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, 05ஆம் கட்டைப்பகுதியில் தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளொன்று, நேற்றிரவு (26) மோதி விபத்துக்குள்ளானதில், அந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சீனக்குடா, கொட்பே பகுதியைச் சேர்ந்த ஜீ.ஜீ.எஸ். புஸ்பகுமார (வயது 23) எனும் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த இளைஞன், மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றமையினாலேயே, இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக, ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த இளைஞன், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago