Editorial / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், யு.அ.கீத்
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில், இருவருக்கிடையில் நேற்று (12) இரவு ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கோடுவாடுவ பகுதியைச் சேர்ந்த சுமித் பெர்ணான்டோ (40 வயது) எனவும் இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குடா மீன் வாடியொன்றில், மூவர் ஒன்றிணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியமையாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
44 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
52 minute ago