தீஷான் அஹமட் / 2018 ஜூலை 21 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் பிரதான வீதியூடாக மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற 25 வயதுடைய இளைஞனை, நேற்றிரவு (20) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மோட்டார் சைக்கிளை இடைமறித்து இளைஞனை சோதனை செய்தபோது, மது அருந்திய விடயம் தெரியவர, அவரை கைது செய்ததாகத் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை, கந்தளாய் பொலிஸில் தடுத்து வைத்துள்ளதோடு, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
14 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
3 hours ago