Niroshini / 2016 மார்ச் 21 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
மனிதனை மனிதாக மாற்றுவதற்கு மதங்கள் இன்றியமையாத ஒன்றாகும். அந்தவகையில் தத்தமது மதங்கள் நல்ல நல்ல போதனைகளை மக்களுக்கு தெளிவுபடுத்துகின்ற போது தத்தமது கலாசாரங்களில் சமூக சீர்கேடுகளை தடுத்து நிறுத்த முடியும் என மூதூர் பிரஜைகள் குழுவின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்கள் தெரவித்தார்.
சல்வதேச கலாசார தினத்தை முன்னிட்டு, மூதூர் இந்து குருமார் சங்கத்தின் ஏற்பாட்டில் பட்டித்திடல் சித்தி விநாயகர் அறநெறி பாடசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போது, இதனை தெரிவித்தார்.
இதில் அறநெறி பாடசாலை மாணவர்கள் அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சமூக முரண்பாடுகள் தோன்றாத வண்ணம் நாம் நமது கலாசாரங்களை பேணி நடக்க வேண்டும். அரசாங்கம் சமய நிறுவனங்களுக்கு செய்கின்ற உதவிகள் போதாமையாக உள்ளது.
அதேவேளை, அரசாங்கத்தினால் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் சரியான முறையில் கிடைக்கப்பெறப்படுகின்றதா என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.
அத்தோடு அரசாங்கம் சமய நிறுவனங்களுக்குச் செய்கின்ற உதவிகளை அதிகரித்துச் செய்யுமாக இருந்தால் நாட்டில் சமூக முரண்பாடுகள் ஒழிக்கப்பட்டு சிறந்த கலாசார ஒழுக்க விழுமியங்களை கொண்ட நாடாக இலங்கை மிளிரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.
11 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago