2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மனைவிக்கு துருவு பலகைத் தாக்குதல்: கணவர் தலைமறைவு

Princiya Dixci   / 2016 ஜூன் 23 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, பன்குளம் பகுதியில், மனைவியை, துருவு பலகையால் தாக்கிய கணவன் தலைமறைவாகியுள்ளதாகவும் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த மனைவி, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர், திருகோணமலை, பன்குளம் பகுதியைச்சேர்ந்த எஸ்.தங்கம்மா (54 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கணவரும் மனைவியும் ஒன்றாக மது அருந்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், மனைவியின் தலையில் துருவு பலகையினால் தாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

மஹாதிவுல்வௌ கிராமிய பாதிக்கப்பட்ட பெண்ணை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய கணவர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X