Niroshini / 2016 நவம்பர் 22 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியை சந்தேகத்தின் பேரில் அடித்து காயப்படுத்திய நபர் ஒருவரை இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க நேற்றுத் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், தனது மனைவி பாடசாலை காலத்தில் காதலித்த நபருடன் தொடர்புகளை பேணிவருவதாக அறிந்து சந்தேகத்தில் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த நபரை ஞாயிற்றுக்கிழமை(20) இரவு, பொலிஸார் கைது செய்தனர்.
27 minute ago
32 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
4 hours ago