Editorial / 2020 மே 29 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
மனித - யானை மோதலைத் தடுக்கும் பொருட்டு, யானைகள் படையெடுக்கும் பிரதேசங்கள் அடையாளம் காணப்படுமென, கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டுபிடிக்குமாறும், அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
விவசாயத்துக்குத் தேவையான நிலங்களை அடையாளம் காண்வதுடன், காட்டு யானைகளின் வாழ்விட மண்டலங்களை வரைபடமாக்க வேண்டுமெனவும், ஆளுநர் தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், ஆளுநர் இதனை முன்வைத்தார்.
மகாவெளித் திணைக்கள உத்தியோகத்தர்கள், வனவிலங்கு பாதுகாப்புத் துறை, வனவிலங்கு வள காப்பீட்டுத் துறை உயரதிகாரிகள் எனப் பலர் இதில் கலந்துகொண்டனர்.
மனித - யானை மோதலை தீர்க்க, ஆளுநர் செயலகத்துக்கு மக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை, எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்துக்கு விவசாயம் பெரும் பங்களிப்பாக இருக்குமெனவும் விவசாய நோக்கங்களுக்காக பயிரிடப்படாத நிலங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆளுநர் மேலும் கூறினார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago