Princiya Dixci / 2016 மார்ச் 17 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை பிரதேசத்தில் மருமகளைத் தாக்கிய மாமாவை, இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ருவான் திஸாநாயக்க, நேற்று புதன்கிழமை (16) உத்தரவிட்டார்.
திருகோணமலை, ஆனந்தபுரிப் பகுதியைச் சேர்ந்த 44வ யதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், மது அருந்திவிட்டு தனது அக்காவின் மகளிடம் பணம் கேட்டுத் தாக்கியதாக உப்புவெளிப் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரைப் பொலிஸார் செவ்வாய்கிழமை (15) இரவு கைதுசெய்தனர்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago