2025 மே 02, வெள்ளிக்கிழமை

மரக் கன்றுகள் நடும் திட்டம்

தீஷான் அஹமட்   / 2019 ஜூலை 08 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச சபையின் தவிசாளரின் எண்ணக் கருவில் உருவான  "பசுமைப் புரட்சி" எனும் வேலைத் திட்டம் மூதூரில் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றது.  மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில்   சூழலுக்கு பயன்தரும் 20 மரக் கன்றுகள் நடப்பட்டன.இப் பசுமைப் புரட்சி வேலைத் திட்டம் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட சகல கிராமங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர், மூதூர் பிரதேச சபை  உறுப்பினர்களான ஏ.எம்.ஹரீஸ், ஏ.எஸ்.எம்.தாணீஸ், பீ.டி.ஆப்தீன், பீ.டி.பைஸர், எம்.வஹ்ஜீத், எம்.ஜெஸீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X