2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மரக்குற்றிகள் கடத்தல்; நால்வர் கைது

எப். முபாரக்   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில், சட்டவிரோதமான முறையில் 14 முதிரை மரக்குற்றிகளைக் கொண்டு சென்ற நால்வரை, நேற்று (12) மாலை கைதுசெய்ததாக, வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கந்தளாய் - அக்போபுர, பொட்டம்காடு பகுதியைச் சேர்ந்த 25, 31, 37 வயதுடைய நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களை, கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள், நான்கு மோட்டார் சைக்கிள்களில் எட்டு அடிகளை உடைய 14 முதிரை மரக்குற்றிகளைக் கொண்டு சென்ற போது, வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கைதுசெய்யப்பட்டு, ஒப்படைக்கப்பட்டதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களைத் தடுத்துவைத்துள்ளதோடு, கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .