Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 21 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சால் தேசிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் முதியோர்களுக்கான மருத்துவ முகாம், ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மீறாவோடை குடும்பநல பரிசோதனை நிலையத்தில், இன்று (21) நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுதின் வழிகாட்டலில், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி த.யாழினி, செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முதியோர்களுக்கான வைத்திய முகாமில் மீறாவோடை கிராமத்திலுள்ள முதியோர்கள் கலந்துகொண்டதுடன், இரத்த அழுத்த பரிசோதனை, பல் சிகிச்சை, ஏனைய மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றது.
இவ்வைத்திய முகாமில் மிறாவோடை கிராம வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எச்.எம்.எம்.முஸ்தபா, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எப்.எஸ்.எம்.வஸீம், பல்வைத்தியர் ஏ.எல்.ஏ.ஹசீனா ஆகியோர் கலந்துகொண்டு சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
18 minute ago
25 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
49 minute ago