2025 மே 14, புதன்கிழமை

மருமகனுக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2017 ஜூலை 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, சேருநுவரப் பகுதியில்,  மாமா  ஒருவரைக்  கோடரியால் வெட்டிக் காயப்படுத்திய  43 வயதையுடைய மருமகனை, ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டார்.

மதுபோதையில் வந்த குறித்த நபர், தனது மனைவியையும் மாமாவையும், தகாத வார்த்தைகளால் பேசியமையால் ஆத்திரமடைந்த மாமா, பொல்லால் மருமகனைத் தாக்கியதையடுத்து, மருமகன், கோடரியால் மாமாவை வெட்டியுள்ளார்.

மனைவி வழங்கிய முறைப்பாட்டுக்கமைய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன், மாமா, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .