Editorial / 2020 ஏப்ரல் 10 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, கிண்ணியாவில், ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில், மஸ்ஜித்களில் 15 நிமிடங்கள் ஆன்மீக உரைக்கு நிகழ்த்துவதற்கு, பாதுகாப்புத் தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
கிண்ணியா ஜெம் இய்யத்துல் உலமாவின் கோரிக்கைக்கு அமைவாக, ஆன்மீக, சமகால நிகழ்வுகள் தொடர்பாக வழிகாட்டல்கள் உரைகளை நிகழ்த்துவதற்கு, அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்கமைய கிண்ணியாவில் நாளாந்தம் இஷா தொழுகை நேரத்தின் பின் தேர்ந்தெடுக்கப்படும் மஸ்ஜித்களில் 15 நிமிடங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற் கட்ட உரை, கிண்ணியா ஜாவா மஸ்ஜித்தில், வியாழக்கிழமை (9) நடைபெற்றது. கிண்ணியா ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் ஏ.எம். ஹிதாயதுள்ளாஹ் (நளீமி) உரை நிகழ்த்தினார்.
இதில் பொது மக்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதோடு அவர்கள் வீடுகளிலிருந்து ஒலி பெருக்கி மூலம் இவ் உரையினை அவதானிக்க முடியும்.
இதன் மூலம் நாட்டில் இடம் கொரோனா வைரஸ் தொற்று, நாட்டின் ஊரடங்கு சட்ட திட்டங்கள் எப்படி மதித்து நடப்பது, ஆன்மீக வழிகாட்டல் , உணவுச் சிக்கனம், போன்ற கருத்துரைகள் இதன் மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தப் படுகிறது.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025