அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூலை 25 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக எஸ்.அருள்குமரன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால் நேற்று (24) நியமிக்கப்பட்டார்.
மாகாணப் பணிப்பாளராக முன்னர் கடமையாற்றிய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே.முருகானந்தம், தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து, சிறப்பு வைத்திய நிபுணராகக் கடமையாற்றிய அருள்குமரன் நியமிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாணத்தில் வைத்தியத்துறையில் பல சாதனைகளை படைத்த இவர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பயிற்றுவிப்பாளராகவும் சுகாதார துறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சென்று ஊழியர்களின் பிரச்சினைகளையும் குறைகளையும் கேட்டறிந்து, உடனுக்குடன் தேவைகளை பூர்த்தி செய்து, ஊழியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
8 minute ago
13 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
3 hours ago