Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஒலுமுதீன் கியாஸ் / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மீலாத் போட்டி, எதிர்வரும் வியாழன் (5) மற்றும் வெள்ளி (6) ஆகிய நாட்களில், கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள 9 கல்வி வலயங்களில் இருந்தும், வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றப் போட்டியாளர்கள், இதில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
முதலாம் நாள் கிராத் , அல்குர்ஆன் மனனம் , பேச்சு (தமிழ், சிங்கம், அரபு, ஆங்கிலம்) , எழத்து போட்டிகள் (கட்டுரை , கவிதை , அரபு எழுத்தணி, சிறுகதை) கஸீதா ஆகிய போட்டிகள் இடம்பெற இருக்கின்றன. இவை கனிஷ்டப் பிரிவுகளுக்கு நடைபெறும்.
இரண்டாம் நாளில் இதே போட்டிகள் இடைநிலை மற்றும் சிரேஷ்ட பிரிவுகளுக்கு நடைபெறவுள்ளதோடு , சகல பிரிவுகளுக்குமான பக்கீர் பைத், கோலாட்டம் , கதம்பம் , நாடகம் ஆகிய போட்டிகளும் நடைபெறவுள்ளன.
வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்ற பெண் போட்டியாளர்களுக்கு, கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் ரீ.பி. ஜாயா வித்தியாலயம் ஆகியவற்றில் தங்குமிட வசதிகள் செய்யப்பட்டிருப்பதோடு, ஆண் போட்டியாளர்களுக்கு கிண்ணியா அல் அக்ஸா மகா வித்தியாலம் , அப்துல் மஜீத் வித்தியாலயம் ஆகியவற்றில் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago